பணம் இல்லையே..புதுவை அமைச்சர் புலம்பல்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான் என்று புதுவை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில், அமைச்சர் கந்தசாமி கலநத்து கொண்டு பேசுகையில், மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான்.

இரண்டு கிலோ அரிசி போடுவதற்கு கூட அரசிடம் இன்று பணமில்லாத நிலை உள்ளது.

கடந்த வாரம், புழுத்துப் போன அரிசி போடுவதாகக் கூறி முதல்வர் வீட்டு முன் மகளிர் சங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரிசியை கொட்டி போராட்டம் நடத்தினர்.
இது புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பெயரை கெடுப்பதற்காக நடந்த போராட்டம் என்று தான் கூற வேண்ட்டும்.

தற்போது, மத்திய அமைச்சர் நாராயணசாமி, குடிமைப் பொருள் துறை அலுவலரிடம் நல்ல அரிசி வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

கிலோ ஒரு ரூபாய் வீதம், 10 கிலோ அரிசி ரேஷனில் வழங்குவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+