தலைமை நீதிபதி கோகலேவுக்கு கார், நிலம், வீடு இல்லை!

இதில் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவுக்கு சொந்தமாக கார், வீட்டு மனை, விவசாய நிலம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் படிப்படியாக சொத்து விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை சமீபத்தில் வெளியிட்டனர். இது தற்போது உயர்நீதிமன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
உயர்நீதி்மன்ற நீதிபதிகள் 54 பேரின் சொத்துக் கணக்கும் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவின் சொத்துக் கணக்கு விவரம்...
பண இருப்பு - சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, மும்பை பிரதான கிளையில் 23 லட்சத்து 53 ஆயிரத்து 120 ரூபாய் 29 காசுகள், சென்ட்ரல் பாங்க் அலகாபாத் கிளையில் 40 ஆயிரத்து 605 ரூபாய், சென்ட்ரல் பாங்க் சென்னை கிளையில் 14 லட்சத்து 85 ஆயிரத்து 920 ரூபாய்.
பிற முதலீடுகள் - பாம்பே டையிங் (100), ரிலையன்ஸ் (192), கிராசிம் (65), கம்மின்ஸ் (700), கிர்லோஸ்கர் என்ஜீனியர் (150), டிஸ்கோ (420), டிஸ்கோ (310), டெல்கோ (272), உள்ளிட்ட 15 நிறுவனங்களில் தனது தந்தை வாங்கிய பங்குகள். மனைவி பெயரில், மும்பையில் வால்சந்த் டெரஸ், டர்டியோ சாலையில் 1,200 சதுர அடி பரப்பில் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் வீடு.
மனைவி பெயரில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மும்பை கிளையில் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 481 ரூபாய் 31 காசுகள். அதே வங்கிக் கிளையில் பென்ஷன் கணக்கில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 218 ரூபாய். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் முதலீடு.
தபால் துறை மாத வருவாய்த் திட்டத்தின் கீழ், மும்பை தபால் அலுவலகத்தில் ஒன்பது லட்சம் ரூபாய் முதலீடு. மும்பை அப்னா சககாரி வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு.
தாய், மாமியாருக்குச் சொந்தமான 5.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 335 கிராம் தங்க நகைகள். 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,828 கிராம் வெள்ளி.
கார், வீடு, வீட்டு மனை, விவசாய நிலம் என எதுவும் இல்லை என கோகலேவின் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த நீதிபதி முகோபாத்யாயாவின் சொத்து விவரம்...
பாட்னா, ஸ்ரீகிருஷ்ணபுரியில் 3,300 சதுர அடியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு. காசியாபாத்தில் நீதிபதி மற்றும் அவரது மனைவி பெயரில் 1,875 சதுர அடியில் 1,503 சதுர அடி பரப்பளவில் 40 லட்சத்து 33 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பில் வீடு. பீகார், பாட்னா, எஸ்.கே.நகரில் மூதாதையர் சொத்து.
பாட்னா, எஸ்.கே.நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 23 ஆயிரத்து 351 ரூபாய் 26 காசுகள். சென்னை பாங்க் ஆப் இந்தியாவில் இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 382 ரூபாய் 37 காசுகள். பாட்னா ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 2,000 ரூபாய். பாட்னா, எஸ்.கே.நகர் கிளையில் மனைவி சந்த்ரை பெயரில் 47 ஆயிரத்து 446 ரூபாய் 48 காசுகள்.
மனைவியுடன் சேர்ந்து ஹெச்.டி.எப்.சி., ப்ரூடென்ட் ஃபண்டில் 2.41 லட்சம் ரூபாய். எல்.ஐ.சி.,யில் 1.30 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ், மனைவி பெயரில் இரண்டு லட்சம் ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ.,யில் இன்சூரன்ஸ்.
ஐந்து சவரன் தங்க நகை. மனைவி பெயரில் 25 சவரன் நகை. மகள் பெயரில் ஐந்து சவரன்.
பாங்க் ஆப் இந்தியா ஷ்யாமளி கிளைக்கு 12 லட்சம் ரூபாய் கடன் நிலுவை உள்ளது. சகோதரருக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும்.
இதுபோல 54 நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளையும் http://www.hcmadras.tn.nic.in/assetsofjudges.htm என்ற இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications