பெரியாறு அணையில் நீர்க்கசிவே இல்லை-தமிழகம் மறுப்பு
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் புதிதாக நீர்க்கசிவு ஏற்பட்டிருப்பதாக கேரளா கூறுவதில் உண்மை இல்லை. வழக்கமாக இருக்கும் அணைகளில் ஏற்படும் நீர்க்கசிவு அளவை விட மிகக் குறைந்த அளவிலேயே நீர்க்கசிவு காணப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணையில் ஏகப்பட்ட இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே அணை ஆபத்தாகி விட்டது. பல லட்சம் உயிர்கள் கேள்விக்குறியாகி விட்டது என்று சமீபத்தில் கேரள அரசும், அது நியமித்த நிபுணர் குழுவும் பீதியைக் கிளப்பின.
இதையடுத்து உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று காவிரி டெக்னிகல் செல் பிரிவின் துணைத் தலைவர் சுப்ரமணியன், மதுரை வட்ட பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் பொறியாளர் குழு அணைக்குச் சென்றது.
இந்தக் குழுவில் பெரியாறு அணை உதவி பொறியாளர்கள் நாகஜோதி, தினேஷ் கண்ணன், சந்தனகுமார், தமிழ்செல்வன், கார்த்திகேயன், ஜெகதீஸ், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர்க்கசிவு அளவிடும் காலரி பகுதி ஆகியவற்றை இக்குழு பார்வையிட்டது.
குறிப்பாக நீர்க்கசிவு அதிகம் இருப்பதாக கேரள குழு கூறிய மெயின் அணையில் உள்ள 17, 18 பிளாக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர் குழுத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், கேரள நிபுணர் குழு கூறுவது போல் அணைப்பகுதியில் எங்கும் நீர்க்கசிவு இல்லை. வழக்கமாக கசிவு நீர் எந்த அளவு வெளியேற வேண்டுமோ அதைவிட குறைவாகத்தான் உள்ளது.
இதுகுறித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications