கருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்
காஞ்சிபுரம்: செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களின் பெயர் பட்டியலை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலைகள் நடத்தி வந்த அர்ச்சகர் தேவநாதன் கடந்த வாரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். முதலில் 2 நாள் காவலில் எடுத்து அவரை விசாரித்தபோது, உண்மைகளை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அர்ச்சகருடன் தொடர்பு வைத்திருந்த பெண்கள் குறித்து விசாரிப்பதற்காக மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்ச்சகர் தேவநாதனை பெரிய காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களின் பட்டியலை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் உள்ள பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, காஞ்சிபுரம் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications