காங் 125வது ஆண்டு விழா- சோனியா 64வது பிறந்த நாள்: வரிசை கட்டும் விழாக்கள்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 125 ஆண்டு விழா இந்த மாதம் வருகிறது. அதேபோல அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 64வது பிறந்த நாளும் வருவதால் காங்கிரஸார் இரண்டையும் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
காங்கிரஸ் துவக்கப்பட்டு 125வது ஆண்டு நிறைவு விழாவை இந்தாண்டு இறுதியில் சிறப்பாக கொண்டாட கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கடந்து வந்த பாதையையும், இந்தியாவை ஆட்சி செய்த பாங்கையும் இன்றைய தலைமுறையினருக்கு முழுமையாக எடுத்துச் சொல்லும் வகையில் ஆண்டு முழுவதும் கருந்தரங்குகள், போட்டிகள், கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளனர்.
அதற்கு முன்னதாக வரும் 9ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் 64வது பிறந்தநாள் வருகிறது. இதற்கான ஏற்பாடுகளிலும் காங்கிரசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, அதிக நாட்கள் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்தவர், பிரதமர் பொறுப்பை விட்டுக் கொடுத்தவர், மோதிலால், ஜவஹர்லால், இந்திரா, நேரு வரிசையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சுமக்கும் ஐந்தாவது வாரிசு என சோனியா காந்தி தாங்கி வரும் பல்வேறு பாத்திரங்களை முன்வைத்து விழாவாக கொண்டாட காங்கிரசார் தயாராகி வருகின்றனர்.
இத்தாலியில் பிறந்து இந்தியாவின் அறிவிக்கப்படாத முதல் பெண்மணி அந்தஸ்த்தில் இருக்கும் சோனியாவை அன்னிபெசன்ட், நீலிசென் குப்தாவுக்கு இணையாக வர்ணி்த்து புகழ் பாடி புளகாங்கிதம் அடையவும் காங்கிரஸார் வரிந்து கட்டிக் கொண்டு தயாராகி வருகின்றனராம்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications