For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோர்ட்டில் சரணடைந்தால் அன்றைக்கே ஜாமீன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:​ குற்ற வழக்​கில் நீதி​மன்​றத்​தில் சர​ண​டை​யும் நப​ருக்கு,​ அன்​றைய தினமே ஜாமீன் வழங்​க​லாம் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் தீர்ப்​ப​ளித்​துள்​ளது.

நா​கப்​பட்​டி​னம் அருகே செட்​டிப்​பு​லம் கிரா​மத்​தில் சில வாரங்களுக்கு முன்பு தாழ்த்​தப்​பட்ட மக்​கள் ஏகாம்​ப​ரேஸ்​வ​ரர் கோயிலுக்குள் பிர​வே​சம் செய்​த​னர். அப்​போது,​ இரு பிரி​வி​ன​ருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. இது​தொ​டர்​பாக 315 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டது.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானவர்களில் 10 பேர் தங்​க​ளுக்கும், சம்பவத்திற்கும் எவ்வித தொடர்​பும் இல்லை. வன்​கொ​டு​மைச் சட்​டத்​தில் முன் ஜாமீன் பெற முடி​யாது என்​ப​தால்,​ தாங்​கள் நீதி​மன்​றத்​தில் சர​ண​டை​யும் தினத்​தன்றே ஜாமீன் வழங்க தஞ்​சா​வூர் முதன்மை நீதி​மன்​றத்​துக்கு உத்​த​ர​விட வேண்​டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதி​பதி சி.டி.செல்​வம் முன்​னி​லை​யில் விசா​ர​ணைக்கு வந்​தது. ம​னுவை விசா​ரித்த பிறகு நீதி​பதி, 'ச​ர​ண​டை​யும் நபர்​கள் மீது சுமத்​தப்​ப​டும் குற்​றச் செயல்​களை பரிசீ​லித்து,​ அவர்​களை சிறை​யில் அடைப்​பதா இல்​லையா என்​பதை நீதி​மன்​றம் தீர்​மா​னிக்க அதி​கா​ரம் உள்​ளது.

அ​தே​போல்,​ குற்ற வழக்​கில் நீதி​மன்​றத்​தில் சர​ண​டை​யும் ஒரு​வர்,​ தான் இந்த வழக்​கில் தவ​றா​கச் சேர்க்​கப்​பட்​டி​ருப்​ப​தாக வாதிட்​டால்,​ அவரை சிறைக்கு அனுப்​பா​மல் அன்​றைய தினமே ஜாமீ​னில் வெளி​யி​டு​வது தொடர்​பா​க​வும் நீதி​மன்​றம் பரிசீ​லிக்​க​லாம்.

செட்​டி​பு​லம் வழக்​கில்,​ மனு​தா​ரர்​கள் தஞ்​சா​வூர் நீதி​மன்​றத்​தில் சர​ண​டைந்​தால் அவர்​களை அன்​றைய தினமே ஜாமீ​னில் விடு​விப்​பது குறித்து நீதி​மன்​றம் பரிசீ​லிக்​க​லாம்' என்று உத்​த​ர​வு பிறப்பித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X