ஆவின் முறைகேடு- முகவர்கள் போராட்டம்
சென்னை: ஆவின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து வரும் 10ம் தேதி தமிழ்நாடு பால் முகவர் நலச் சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி இதுகுறித்து கூறியதாவது:
ஆவின் நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக ஊழல் நடைபெற்று வருகிறது. தனியார் பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆவின் அதிகாரிகளும், சில விநியோகஸ்தர்களும் துணை போகின்றனர். இதன் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னையில் உள்ள பால் முகவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பால் அட்டைகளை வழங்காமலும், புதுப்பிக்காமலும் ஆவின் நிர்வாகத்தினர் இருந்து வருகின்றனர்.
எனவே ஆவின் மாதாந்திர அட்டைகளை திரும்ப வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அட்டைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டி ருக்கும் பால் விலையை விட லிட்டருக்கு ரூ.1 கூடுதல் விலை நிர்ணயித்தாவது எங்களுக்கு வணிக அட்டைகள் வழங்க வேண்டும்.
பால் முகவர்களுக்கு தனி நலவாரியம் வேண்டும். அத்துடன் குறைந்த வட்டிக்கு எங்களுக்கு கடன் வழங்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டை நோக்கி பேரணி நடக்க இருக்கிறது.
இப்பேரணியின் முடிவில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவினை முதலமைச்சர், துணை முதல்வர், பால்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கொடுக்க உள்ளோம் என்றார்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications