ஜப்பான் பயணியின் லேப்டாப்-பணம் அபேஸ்: ஆட்டோ டிரைவருக்கு வலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆட்டோவில் ஏறிய ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பயணி, கடைக்கு சென்றபோது விட்டுச்சென்ற லேப்டாப் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு மாயமான ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி மினாடோ ஹாச்சி (45). மைசூரில் இருந்து சென்னை வந்த இவர், எழும்பூர் லாட்ஜில் தங்கி இருந்தார். பொருட்கள் வாங்க ஆட்டோவில் ரிச்சி தெருவுக்கு சென்றார்.
அப்போது ஆட்டோவில் தனது பையை வைத்துவிட்டு அவர் கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவுடன் டிரைவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
பையில் 'லேப்டாப்' மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், ஜப்பான் கரன்சி ஆகியவை இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம். உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications