For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரா​ணம் ஏரி திடீர் திறப்பு​: 20 கிரா​மங்​கள் மூழ்கின

By Staff
Google Oneindia Tamil News

Veeranam
கடலூர்: வீரா​ணம் ஏரியி​லி​ருந்து வெள்​ளி​யங்​கால் ஓடைக்யில் திடீரென தண்​ணீர் திறந்​து ​வி​டப்​பட்​டுள்​ள​தால் 50 கிரா​மங்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ளன.

காட்​டு​மன்​னார்​கோ​யில் அருகே 20க்கும் மேற்​பட்ட கிரா​மங்​கள் முற்​றி​லு​மாக துண்​டிக்​கப்​பட்​டுள்​ளன.​

புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் வீரா​ணம் ஏரி நிரம்பிவிட்டது. இதையடுத்து அதிலிருந்து வெள்​ளி​யங்​கால் ஓடை​யில் 2,700 கன​அடி நீர் திடீரென
வெளி​யேற்​றப்​பட்​டது.

இந்த நீர் காட்​டு​மன்​னார்​கோ​யில் பகு​தி​யில் 50 கிரா​மங்​க​ளில் புகுந்தது. இதனால் வீடுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மக்கள் ஆடு,​​ மாடு​க​ளு​டன் மேடான பகு​தி​யில் தங்​கி​யுள்​ள​னர்.​

மேலும் பல கிரா​மங்​களை நீர் சூழ்ந்துவிட்டதால் அவை துண்​டிக்​கப்​பட்​டுள்ளன. இதையடுத்து இந்த கிராம மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

காட்​டு​மன்​னார்​கோ​யில் பகு​தி​யில் சுமார் 40,000 ஏக்​கர் பரப்பில் பயி​ரி​டப்​பட்ட நெற்​ ப​யிர்​க​ள் முற்றிலும் நீரில் மூழ்கிவிட்டன.

பாதிக்கப்பட்ட இந்த கிரா​மங்​க​ளில் அரசு உரிய மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடவில்லை என அப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முந்​தைய ஆண்​டு​க​ளில் இல்​லாத அள​வுக்கு வீரா​ணம் ஏரி​யில் வழக்​கத்​துக்கு மாறாக நீர்​மட்​டத்தை மிக அதிகமாக உயர்த்​தி​ய​தால் தான் இந்த அளவுக்கு வெள்​ளப் பாதிப்பு
ஏற்​பட்டுள்​ளதாகக் கூறப்படுகிறது

வீ​ரா​ணம் ஏரி​யின் நீர் மட்​டம் நேற்று 46.70 அடி​யாக இருந்​தது.​ இதன் மொத்த கொள்ளவே 47.50 அடி தான்.

இந்த ஏரியில் வட​கி​ழக்​குப் பரு​வ​மழை காலத்​தில் டிசம்​பர் மாத இறு​தி​வரை 43.5 அடி உய​ரத்​துக்கே தண்​ணீ​ரைத் தேக்​க​லாம் என்ற நடை​முறை கடந்த 8 ஆண்​டு​க​ளா​கக்
கடைப்​பி​டிக்​கப்​பட்டு வந்​தது.​

அதி​கப்​ப​டி​யான நீரைத் தேக்​கி​னால்,​​ மழை அதிகரிக்கும்போது ​நீரை திடீ​ரென அதி​க​மாக வெளி​யேற்ற நேரி​டும் என்பதால் இந்த நடை​முறை கடைப்​பி​டிக்​கப்​பட்​டு வந்தது.

ஆனால், இந்த ஆண்டு நடை​முறை மீறப்​பட்​டு மிக அதிகமான நீர் தேக்கப்பட்டு, திடீரென திறந்துவிடப்பட வேண்டிய நிலை உருவானதால் தான் 50 கிரா​மங்​கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏரி​யின் நீர்​மட்​டம் 44 அடி உய​ரத்​துக்கு மேல் அதி​க​ரித்​தபோதே ​ எதிர்​க​ரை​யில் உள்ள கரு​ணா​க​ர​நல்​லூர்,​​ அறந்​தாங்கி,​​ சித்​த​மல்லி உள்​ளிட்ட 15 கிரா​மங்​க​ளில் 10 ஆயி​ரம் ஏக்​கர் நெல்,​​ கரும்பு,​​ வாழை,​​ மணிலா பயிர்​கள் தண்ணீ​ரில் மூழ்​கிவி்டடன என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரி நிரம்புகிறது:

இந் நிலையில் சென்னைக்கு குடி​நீர் வழங்கும் முக்​கிய ஏரியின் நீர் மட்டம் 35 அடியாக உயர்ந்​துள்ளது.

இதையடுத்து லிங்க் கால்​வாய் வழி​யாக 776 கன அடி நீரும்,​​ பேபி கால்​வாய் வழி​யாக 50 கன அடி நீரும் திறந்து விடப்பட்​டு செங்​குன்​றம்,​​ சோழ​வ​ரம் ஏரி​களுக்கு திருப்பிவிடப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X