தங்கம் விலை: இன்றும் பவுனுக்கு ரூ.200 குறைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலையில் இன்று சவரனுக்கு ரூ 200 குறைந்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன் சவரன் ரூ 13500 என்று மிரட்டிய தங்கத்தின் விலை இப்போது வீழ்ச்சியடை ஆரம்பித்துள்ளது.

நேற்று சென்னை சந்தை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.1,582 ஆக இருந்தது. ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.12,656 ஆக விற்கப்பட்டது.

இன்று தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுது. கிராமுக்கு 25 ரூபாய் திடீரென குறைந்தது.

அதாவது ஒரு பவுனுக்கு 200 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் இன்று ஒரு பவுன் ஆபரண தங்கம் விலை ரூ.12,456 ஆக விற்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்குள் தங்கம் விலையில் சுமார் ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.

கடைக்காரர்களோ, இது தற்காலிகமானதுதான், மீண்டும் விலை உயரும். ரூ 20000 வரை செல்லும் என்று கடுப்போடு கூறி வருகிறார்கள். மக்களோ விலை குறைந்த வரை லாபம் என நகை வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+