நேரடி வெளிநாட்டு முதலீடு - தமிழகத்திற்கு 5வது இடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகத்திற்கு 5வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் குஜராத்தும், 3வது இடத்தில் கர்நாடகமும் உள்ளன.

இந்தியாவின் மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் மகாராஷ்டிராவின் பங்கு 45.44 சதவீதமாகும். அந்த மாநிலம், 12,409.20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்துள்ளது.

2வது இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம், 10.35 பங்குடன் 2825.80 மில்லியன் டாலர் நிதியை கவர்ந்துள்ளது.

3வது இடத்தில் உள்ள கர்நாடகத்தின் பங்கு 7.42 சதவீதமாகும். இதன் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவு 2,026.4 மில்லியன் டாலராகும்.

தமிழகம் இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. இதன் அளவு, 1724.20 மில்லியன் டாலராகும். இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகத்தின் பங்கு 6.31 சதவீதம்.

ஆந்திரா நமக்கு அடுத்த இடத்தில் (1237.80 மில்லியன் டாலர்) உள்ளது.

முதல் ஆறு இடத்தில் உள்ள மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழகம், ஆந்திரா ஆகியவை இணைந்து 2009ம் நிதியாண்டில் 81 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த நிதியாண்டில், நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 11 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 24,580 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+