For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் சிக்கிய ரூ.45 கோடி போதை பொருள்-3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

Ketamine
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் வழியாக மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 45 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் புனலாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வருவாய் புலனாய்வுத் துறை உதவி இயக்குனர் அமல்ராஜ், புலனாய்வு அதிகாரிகள் முத்து கிருஷ்ணன், ராஜ் மற்றும அதிகாரிகள், தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து மலேசியாவில் உள்ள போர்ட் கில்லாங்கிற்கு அனுப்ப தயாராக இருந்த ஒரு கன்டெய்னரை சோதனை போட்டனர்.

அதில் 520 உப்பு பாக்கெட் மூட்டைகள் இருந்தன. அவற்றில் சில மூடைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது உப்பு பாக்கெட்டுகளின் மத்தியில் கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு போதை பொருள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கன்டெய்னிரில் 22 மூட்டைகளில் இருந்த மொத்தம் 440 கிலோ கோட்டமைன் ஹைட்ரோ குளோரைடை பறிமுதல் செய்தனர். இதன சர்வதேச மதிப்பு ரூ.45 கோடியாகும்.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகல்கள் கிடைத்தது. ஹைதரபாத்தில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு லாரிகளில் அவல், வடகம் ஆகியவற்றிக்கு மத்தியில் கோட்டமைன் மூட்டைகளை மறைத்து கடத்தி வந்து குறிஞ்சி நகரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்துள்ளனர்.

பின்னர் இங்கிருந்து உப்பு மூட்டைகலுக்கு மத்தியில் மறைத்து மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

சென்னை மிண்ட் தெருவில் உள்ள தனலெட்சுமி எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் முலம் கோட்டமைனை மலேசியாவிற்கு அனுப்ப இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த சதிஷ், கோவில்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி, உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கஸ்டம்ஸ் முகவர், தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனி ஊழியர்கள், 3 பேர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் தனலெட்சுமி எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள் மற்றும் பிடிபட்டுள்ள சதிஷ், கந்தசாமி ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் ஏஜென்சி ஆகிய பகுதிகளில் சென்னை மற்றும் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தமிழகத்தில் மிக அதிகமாக ரூ.45 கோடி மதிப்பிலான 440 கிலோ எடையுள்ள போதை பொருள் சிக்கியது இதுவே முதல்முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X