For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதியில் இருந்து விமானத்தில் 'வித்அவுட்'டில் வந்தவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

Man flies by Air India Plane Sans Ticket
ஜெயப்பூர்: பாஸ்போர்ட், டிக்கெட் எதுவுமில்லாமல் விமானத்தின் கழிவறையில் பதுங்கியபடி, சவுதியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹபீப் (25). இவர் சவுதியின் மெடினா விமான நிலையத்தில் துப்புறவு வேலைகள் செய்து வந்துள்ளார்.

இவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர்.

சவுதியில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் எப்படியோ ஊழியர்களை எப்படியோ தாஜா செய்துவிட்டு விமானத்தின் கழிவறையில் பதுங்கிக் கொண்ட இவர் விசா, பாஸ்போர்ட், டிக்கெட் எதுவுமில்லாமல் ஜெயப்பூருக்கு பயணம் செய்ததாக போலீசார் கூறினார்.

சவுதியில் டாய்லெட்டை சுத்தம் செயவதாகக் கூறிவிட்டு இவர் உள்ளே நுழைந்த ஹபீப், விமானம் புறப்படும் வரை உள்ளேயே பதுங்கியிருந்துள்ளார். பின்னர் சற்று நேரம் கழித்து பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விமான ஊழியர்களிடம் சொல்லியிருக்கிறார்.

முதலில் தீவிரவாதி உள்ளே இருப்பதாக பயந்து போன ஊழியர்கள் ஹபீப்பின் முழியைப் பார்த்து சற்று தெம்பாகி விசாரித்திருக்கிறார்கள். ஹபீப்பிடம் எந்தவொரு ஆவணமும் இல்லை. பாஸ்போர்ட், விசா, டிக்கெட் எதுவும் இல்லாமல் ஹபீப் விமானத்தில் நுழைந்தது தெரியவந்தது.

மற்றபடி ஹபீப்பால் எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை உணர்ந்த ஊழியர்கள் விமானம் தரையிறங்கப் போகும் ஜெயப்பூர் விமான நிலைய பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜெய்ப்பூரில் விமானம் தரையிறங்கயதும், ஹபீப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, தன் சொந்த ஊர் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார் ஹபீப்.

மேலும் சவுதி விமான நிலையத்தில் துப்புறவு பணிக்காக ஒரு கான்டிராக்டரிடம் தான் வேலை செய்து வந்ததாகவும், அந்த கான்டிராக்டர் தன்னுடைய ஒட்டுமொத்த ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும் ஹபீப் போலீசாரிடம் கூறியுள்ளார்.

எப்படியாவது சொந்த ஊருக்கு போய்சேர்ந்து விடலாம் என நினைத்து இவ்வாறு செய்ததாக ஹபீப் கூறியுள்ளார். ராஜஸ்தான் போலீசார் தொடர்ந்து அவரிடம விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X