இன்டர்நெட் தேடல்-உட்ஸை முந்திய என்.டி.திவாரி

Subscribe to Oneindia Tamil

Tiwari
டெல்லி: இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் டைகர் உட்ஸை முந்தி விட்டார் 'சில்மிஷத் தாத்தா' என்.டி.திவாரி.

இவரா இப்படி என்று அத்தனை பேருமே அதிர்ந்து போய் நின்றார்கள் என்.டி.திவாரி செய்த சேஷ்டைகளைப் பார்த்து. அவருடைய வயதுக்கு சற்றும் பொருத்தமே இல்லாத அசிங்கமான செயலில் ஈடுபட்டு அவமானப்பட்டு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உத்தரகாண்ட்டுக்கு ஓடி விட்டார் திவாரி.

இந்த நிலையில், இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் திவாரி புது புகழைப் பெற்றுள்ளார்.

முன்பு டைகர் உட்ஸ் தொடர்பான செக்ஸ் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியபோது அவரைப் பற்றிய அதிக தேடுதல்கள் இணையதளங்களை ஆக்கிரமித்திருந்தன. தற்போது அதை பீட் செய்து விட்டார் என்.டி.திவாரி.

கூகுள் சர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் திவாரி விவகாரம்தான் முதலிடத்தில் உள்ளதாம்.

100 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் திவாரி. உட்ஸுக்கு வெறும் 15 புள்ளிகளே கிடைத்துள்ளன.

மேலும், யூ டியூப் இணையதளத்தில் என்.டி.திவாரி செக்ஸ் லீலைகள் குறித்த வீடியோவும் வெளியாகி விட்டது. 3 நிமிடம் 20 வினாடி இந்த வீடியோ ஓடுகிறது. இதையும் பலர் தேடி படையெடுக்கிறார்கள்.

அதேசமயம், சிலர் போலியான வீடியோக்களை என்.டி.திவாரியின் லீலைகள் என்ற பெயரிலும் உள்ளே சொருகி விட்டுள்ளனராம்.

என்.டி.திவாரி, என்.டி. திவாரி யூ டியூப், என்.டி. திவாரி வீடியோ, நாராயண் தத் திவாரி வீடியோ, என்.டி.திவாரி கேஸ் என பல்வேறு தலைப்புகளை கொடுத்து இணைய தளத்தில் தேடுகின்றனர்.

இத்தனை தில்லாலங்கடியாக அசிங்கமான வேலையில் ஈடுபட்டாலும் கூட உத்தரகாண்ட்டில் திவாரிக்கு ஆதரவாக இன்னும் ஒரு கோஷ்டி சுற்றிக் கொண்டுள்ளது. டேராடூன் நகரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவுக்கு ஏன் எங்கள் 'தலை'யை அழைக்க வில்லை என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டனராம் திவாரியின் ஆதரவாளர்கள்.

சொல்ல முடியாது, திவாரி தனிக்கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+