உட்ஸ் செக்ஸ் விவகாரம்-ஸ்பான்சர்களுக்கு நஷ்டம் $12 பில்லியன்

இதுகுறித்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சார்பில் டேவிஸ் அமைப்பு நடத்தியது. அதில், டைகர் உட்ஸின் செக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரையிலான கால கட்டத்தில் அவருக்கு ஸ்பான்சர் செய்து வந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஏடிஅன்ட்டி, டைகர் உட்ஸ் பிஜிஏ டூர் கோல்ப், ஜில்லட், நைக், காட்டரேட், டிஎல்சி லேசர் ஐ சென்டர், கோல்ப் டைஜஸ்ட் ஆகியவையே வீழ்ச்சியை சந்தித்த நிறுவனங்கள்.
செக்ஸ் சூதாட்டத்திற்கு முன்பு வரை டைகர் உட்ஸ் ஆண்டுதோறும் விளம்பர வருவாயாக மட்டும் 100 மில்லியன் டாலர் சம்பாதித்து வந்தார்.
உட்ஸ் விவகாரத்தால் ஏற்பட்ட சரிவால் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகபட்சமாக 12 பில்லியன் டாலராக உள்ளது.
மேலும், காட்டரேட், நைக், பிஜிஏ டூர் கோல்ப் ஆகியவைதான் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இவற்றின் நஷ்டக் கணக்கு மட்டும் 6 பில்லியன் டாலர்களாகும் என அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications