தங்கம் விலை ஒரே நாளில் ரூ.168 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக உயர்வதும் தாழ்வதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இரு தினங்களுக்கு ஒரு முறை ஏறுவதும், பின் மீண்டும் அதே அளவு குறைவதுமாக உள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.12,632க்கு விற்றது. அதற்கு முன்புதான் சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருந்தது.
இன்று ஒரே நாளில் ரூ. 68 குறைந்து ரூ.12,464க்கு விற்றது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.1,558 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,750க்கு விற்றது.
பார் வெள்ளி இன்று ரூ.28,550 ஆகவும், 1 கிராம் 30 ரூபாய் 50 காசாகவும் விற்கப்பட்டது.












Click it and Unblock the Notifications