குஜராத்தில் மட்டும் அமுல் பால் விலை உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

Amul
அகமதாபாத்: குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் அமுல் பால் வகைகளின் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது.

இருப்பினும் இந்த பால் மற்றும் பால் பொருள் விலை உயர்வு குஜராத்துக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆவின் இருப்பது போல குஜராத்தில் அமுல் உள்ளது. பால் மற்றும் பால் பொருட்களை இது தயாரித்து விற்று வருகிறது.

குஜராத்தில் விற்பனையாகும் அமுல் பாலின் விலை பிப்ரவரி 1ம் தேதி முதல் உயர்த்த அமுல் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைமைப் பொது மேலாளர் சோதி கூறுகையில், தாஸா, ஸ்லிம் அன்ட் டிரிம் வகை பால்களின் விலை லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்படும்.

அதேபோல கோல்டு, சக்தி ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும்.

கால்நடைத் தீவண விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக பால் விலை உயர்த்த நேரிட்டுள்ளது என்றார்.

சமீபத்தில்தான் பால் விலை உயர வாய்ப்புள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறியிருந்தார். இந்த நிலையில் குஜராத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமுல் பால் பொருடகள் தேசிய அளவில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+