அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும்- உலக வங்கி

Subscribe to Oneindia Tamil

World Bank
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2010 -11 ல் 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் அது 8 சதவீதமாக உயரும் என உலக வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் வளர்ச்சி சாத்தியக் கூறுகள் குறித்த பிரிவின் இயக்குநர் ஹன்ஸ் டிம்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009-10ம் நிதியாண்டின் முதல் காலாண்டு வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார சிக்கலை இந்தியா திறம்பட சமாளித்துள்ளது. பெரும் சரிவில் வீழாமல் தப்பியுள்ளது. அதேசமயம், பிற வளரும் நாடுகளில் பெரும் நிதிப் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன என்றார்.

சமீபத்தில்தான் இந்திய ரிசர்வ் வங்கி வருகிற நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இருப்பினும் 6.1 சதவீதமாக அது இருந்தது.

கடந்த 2007-08ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தேக்க நிலையால் இயற்கை வளங்கள் மற்றும் உற்பத்திப் பிரிவு ஆகியவை பெரும் சரிவை சந்தித்தன.

இதற்கிடையே, வரும் நிதியாண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+