விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - சென்னை பல்கலை. முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம்,​​ இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 1.2 லட்சம் மாணவர்கள் நவம்பர் 2009 பருவத் தேர்வு எழுதினர்.​ இந்த மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு 4,153 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.

அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு,​​ விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு 40 சதவீத ஆசிரியர்கள் வரவில்லை.

இந்த நிலையில், விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது,​​ வரும் ஏப்ரல் பருவத் தேர்வு போன்றவை குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் துணைவேந்தர் க.​ திருவாசகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து திருவாசகம் கூறுகையில்,

விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டவர்களில் 2,524 பேர் மட்டுமே பங்கேற்றனர்.​ 1,629 பேர் பணிக்கு வரவில்லை.​

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.​ அதற்காக,​​ விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன.

அரசுக் கல்லூரிகள் விஷயத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரிடமும்,​​ தனியார் கல்லூரிகளுக்காக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் செயலர்களிடமும் பேசப்பட உள்ளது.

பல்கலைக்கழக ஏப்ரல் 2010 பருவத்தின் செய்முறைத் தேர்வு மார்ச் 29ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ல் முடிகிறது.​ எழுத்துத் தேர்வு ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி மே 26ல் முடிகிறது.

இந்தத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 12ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு,​​ தேர்வு முடிவுகள் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும்.​ ​

எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 8 முதல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும்.​ 3 ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில்,​​ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 26க்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+