காதலர் தினக் கொண்டாட்டம்- ஸ்ரீராம் சேனா மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Pramod Muthalik
பெல்காம்: கர்நாடகாவில் காதலர் தினம் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனா எச்சரித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மங்களூர் பப்புக்குள் புகுந்து இந்த அமைப்பினர் பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி பாப்புலர் ஆனவர்கள்.

இந்த நிலையில் வருகிற 14ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை கர்நாடகத்தில் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பெல்காமில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், தியேட்டர்கள், காதலர் தினக் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

காதலில் நம்பிக்கை உள்ள, உண்மையான காதலர்கள் எங்களை அணுக வேண்டும். நாங்கள் அவர்களது பெற்றோர்களிடம் பேசி கல்யாணம் செய்து வைப்போம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை சேர்க்காதது குறித்து ஷாருக் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து, அவர் நடித்துள்ள மை நேம் இஸ் கான் படத்தை கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+