இன்போஸிஸ் நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் குழு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான இன்போஸிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு முற்றாக மாற்றி அமைக்கப்படுகிறது.

இதன் தற்போதைய இயக்குநர் குழு உறுப்பினர்கள் 2014-ல் ஓய்வு பெறுகிறார்கள். இருந்தாலும் நான்கு ஆண்டுகள் முன்னதாகவே அடுத்த தலைமுறைக்கான இயக்குநர்களைத் தேர்வு செய்யும் பணியில் இன்போஸிஸ் மனித வள மேம்பாட்டுத் துறை தீவிரமாக உள்ளது.

சொல்லப்போனால் 2008-லேயே இளம் தலைமுறைக்கான இயக்குநர் குழுவை இந்த நிறுவனம் தயார் செய்துவிட்டதாக இன்போஸிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் இப்போதைய இயக்குநர் குழு உறுப்பினர்கள்:

பிஜி சீனிவாஸ் (மூத்த துணைத் தலைவர்-தயாரிப்பு), அஷோக் வெமுரி (முத்த துணைத் தலைவர் -சர்வதேச தலைமை), சுபாஷ் தர் (மூத்த துணைத் தலைவர், சர்வதேச விற்பனை, மீடியா மேலாண்மை) மற்றும் சந்திர சேகர ககல் (மூத்த துணைத் தலைவர், வர்த்தக தீர்வுகள் - சர்வதேச தலைமை).

ஐரேஸ்...

இதற்கிடையே, இன்போஸிஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐரேஸ் திட்டத்தை மேலும் தொடர்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டப்படி, வெறும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு என்றில்லாமல் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு தரப்படும். இதனால் பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெறும் பட்டியலில் இருப்போர் நீண்ட நாள் காத்திருக்க வேண்டி வரும்.

இந்த திட்டத்துக்கு நிறுவனத்தின் ஒரு பிரிவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல் அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது இன்போஸிஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+