சேலம்-சென்னை விமான கட்டணம் குறைப்பு- கிங் பிஷர் நிறுவனம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம், சென்னை இடையிலான விமான கட்டணம் பிப்ரவரி 15ம் தேதி முதல் ரூ.1,999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கிங்பிஷர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கிங் பிஷர் நிறுவனம் 72 பேர் பயணம் செய்யக் கூடிய சிற்ிய விமான சேவையை கடந்த நவம்பர் 15 ம் தேதி முதல் சேலம்- சென்னை மார்க்கத்தில் தொடங்கியது.

இந்த விமானம் தினசரி மதியம் 2.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு 3.50க்கு சேலம் வந்தடைகிறது.

அதே போன்று சேலத்தில் இருந்து மாலை 4.20க்குப் புறப்பட்டு மாலை 5.20க்கு சென்னை சென்றடைகிறது.

ஆரம்பத்தில் சேலத்திலிருந்து சென்னைக்கு, குறைந்தபட்சம் ரூ.2,877 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. பின்பு பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ரூ.2,029 முதல் ரூ.7,129 வரை விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில், பிப்ரவரி 15ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை, அனைத்து பயணிகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.1,999 என நிர்ணயித்து கிங் பிஷர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+