பார்வர்ட் பிளாக் கட்சியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதா? - ராமதாஸுக்குக் கண்டனம்
சென்னை: பார்வர்டு பிளாக் கட்சியை கொச்சைப்படுத்தி பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸை கடுமையாக கண்டிப்பதாக பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பென்னாகரம் இடைத்தேர்தல் தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்பட 8 கட்சிகள் டெல்லியில் தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தோம்.
அப்போது எங்களை குறிப்பிட்டு பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தேர்தலிலே போட்டியிடாத கட்சிகள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 1952ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் தொடங்கி பல தொகுதிகளில் பார்வர்டு பிளாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இன்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறோம். எங்களை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி பேசியுள்ள டாக்டர் ராமதாசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications