நாளை நவீன் சாவ்லாவை சந்திக்கும் திமுக கூட்டணி

Subscribe to Oneindia Tamil

Navin Chawla
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளி்ன் எம்பிக்கள் குழு நாளை தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை சந்தக்க முடிவு செய்துள்ளனர்.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை தேர்தலை ஆணையம் இரண்டு முறை ஒத்தி வைத்தது. இது அதிமுகவுக்கு ஆதரவான நடவடிக்கை என்றும், இந்த விஷயத்தில் நவீன் சாவ்லா, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் திமுக, பாமக ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை சந்திக்க உள்ளனர்.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட திமுக கூட்டணி எம்பிக்கள் நாளை நவீன் சாவ்லாவை சந்திக்கவுள்ளதாக திமுக தலைமைக் கழகம் கூறியுள்ளது.

அப்போது பெண்ணாகரம் இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணி எம்பிக்கள் மனு கொடுக்க உள்ளனர்.

பெண்ணாகரம் தொகுதிக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பாதிக்கப்படும் என்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக, அதிமுக ஆகியவை வைத்த கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை தள்ளி வைத்தது.

ஆனாலும் திமுக, பாமக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட நிலையில் அதிமுக மட்டும் அமைதியாக இருந்து வந்தது.

இந் நிலையில் திடீரென வாக்காளர் பட்டியலில் பெருமளவுக்கு பெயர்கள் விடுபட்டுள்ளதாகக் கூறி அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 8 கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்ததையடுத்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. அங்கு தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

இந் நிலையி்ல் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நவீன் சாவ்லா செயல்படுவதாக திமுகவும் பாமகவும் புகார் கூறியுள்ளன

பென்னாகரத்தில் தேர்தல் பணிகளை அதிமுக ஆரம்பிக்காமல் தாமதப்படுத்தியதன் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக, டெல்லியில் நடந்த தேர்தல் ஆணையக் கூட்டத்துக்கு ஜெயலலிதா அழைக்கப்பட்டது, அங்கு சோனியா வரும் வரை தனி அறையில் காத்திருக்க வைக்கப்பட்டு அவருடன் ஜெயலலிதாவை சந்திக்க வைத்தது என்று நவீ்ன் சாவ்லா மீது திமுகவும் பாமகவும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன.

இந் நிலையில் தான் திமுக கூட்டணி எம்பிக்கள் நாளை பென்னாகரம் தேர்தல் தொடர்பாக சாவ்லாவைச் சந்தி்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+