3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே 3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள சாத்தான்காடு கிராம தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள்.

ரவி தற்போது மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். செல்வி புதுவண்ணாரப் பேட்டையில் மாலை நேரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தார். இட்லி வியாபாரத்திற்காக மாலையில் செல்லும் செல்வி இரவு தான் வீடு திரும்புவாராம். அது வரை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் இவரது குழந்தைகளை பார்த்துக் கொள்வாராம்.

இதே போல் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இட்லி வியாபாரத்திற்கு சென்று இரவில் வீடு திரும்பிய செல்வி, தனது 3 வயதான 3 வது குழந்தை ரிஷிகாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் குழந்தையை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று டோல்கேட் அருகே தண்டுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள உணவு பொருள் வாணிப கிடங்கின் சுவர் ஓரத்தில் ரிஷிகாவின் பிணம் கிடந்தது.

விசாரணையில் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை வழக்கில் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் மாரிசெல்வம் (40) என்ற போலீஸ்காரருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸ்காரர் மாரிசெல்வத்தை திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான தனிப் படை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்லி கடை நடத்தி வந்த குழந்தையின் தாய்க்கும், போலீஸ்காரருக்கும் பல மாதமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக போலீஸ்காரர் மாரிசெல்வம் செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாராம்.

இவர்களின் கள்ளத்தொடர்புக்கு 3 வயது ரிஷிகா இடையூறாக இருந்ததாகவும், அதனால் அந்த குழந்தையை டோல்கேட் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+