இந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் ஐடி பணியாளர் நியமனம்!
Subscribe to Oneindia Tamil

டிசிஎஸ், இன்போஸிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மேலும் ஆளெடுப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன.
இந்தியா தவிர, பிற நாடுகளிலும் பொருளாதார நிலைமை மேம்பட்டிருப்பதால் ஐடி நிறுவனங்களின் ஆளெடுப்பு வேகம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம்.
இதில் இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டுமே 98000 புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுமட்டுமல்ல, சர்வதேச தொழிலாளர் மார்க்கெட்டும் வெகுவாக முன்னேறியுள்ளதாம். இதுகுறித்து பிரின்ஸிபல் ரிசர்ச் அனலிஸ்ட் கார்ட்னர் கூறுகையில், "மார்க்கெட் நிலவரம் நன்றாக உள்ளது. 2008-ம் ஆண்டுக்கு முந்தைய நிலைமை இப்போது திரும்ப ஆரம்பித்துள்ளது.
டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் பல மனித வள மேம்பாட்டு மையங்களை அணுகி புதிய பணியாளர் தேர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications