ஷாருக் கானின் படத்துக்கு அஸ்ஸாம் மாணவர்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: ஷாருக் கான் நடித்துள்ள மை நேம் இஸ் கான் படத்தைத் திரையிட அஸ்ஸாமில் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குவஹாத்தியில் மை நேம் இஸ் கான் படம் திரையிடப்பட்டுள்ள பிரக்ஜோதிஷ் சினிமா தியேட்டர் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் தியேட்டருக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர்.
இதேபோல மாநிலத்தின் இதர பகுதிகளிலும் இப்படத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதேபோல ரங்கியா நகரில் புனே குண்டு வெடிப்பைக் கண்டித்து பஜ்ரங் தளம் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது பாகி்ஸ்தான் அதிபர் சர்தாரியின் கொடும்பாவி, பாகிஸ்தான் தேசியக் கொடி ஆகியவற்றை எரித்தனர்.












Click it and Unblock the Notifications