வடிவேலு கூட 10% வாங்குவாரே - திருமா. நக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்தை விட வடிவேலு தேர்தலில் நின்றால் கூடுதலாக 10 சதவீத ஓட்டுக்களை வாங்குவார் என்று விஜயகாந்த்தை கிண்டலடித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

சென்னை பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

சென்னை விடுதலை சிறுத்தையின் கோட்டையாக மாறி வருகிறது. 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக என்னை பிரசாரம் செய்ய அழைத்தார்கள்.

90 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். சென்னையிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். 6 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். காலத்தில் கிடைக்காத வெற்றி எனது பிரசாரத்தால் கிடைத்தது.

அ.தி.மு.க. வின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தையின் பங்களிப்புதான் காரணம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்னையில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வருகிறது.

இந்த கட்சியில் சூப்பர் ஸ்டாரும் இல்லை, நடிகரும் இல்லை கவர்ச்சிக்கு இங்கு இடம் இல்லை. திரை உலகில் சம்பாதித்த பணத்தை வைத்து பேரும் புகழுடன் இருப்பதால் அரசியல் கட்சி தொடங்கி ஜெயித்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் சிலர் வருகிறார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இன்றைய இளைஞர்கள் நன்றாக புரிந்து இருக்கிறார்கள்.

சினிமாவை பார்த்து ஏமாறுகிற காலம் அல்ல இது. அதனால் சினிமாவை காட்டி நாட்டை ஆண்டு விடலாம் என்ற கனவு பலிக்காது. அப்படியானால் நகைச்சுவை நடிகர் கூட அரசியலுக்கு வரலாமே. அவரை ஏமாற்றிய சிங்கமுத்து கூட வரலாம்.

நடிகர் விஜயகாந்த் 2006 தேர்தலில் 236 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். 210 இடங்களில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. விருத்தாசலத்தில் மட்டும் அவர் வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சி பெற்ற ஓட்டு 8 சதவீதம். நடிகர் வடிவேல் போட்டியிட்டால் கூட 10 சதவீத ஓட்டுகள் பெற முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு விஜயகாந்த் தான் முதல்வர் என்ற மாயையை உருவாக்குகிறார்கள்.

விஜயகாந்த் கட்சி திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் வாங்கிய ஓட்டு முதல்வர் கனவை தவிடுபொடியாக்கி விட்டது.

மக்களுடன் தான் கூட்டணி என்று கூறிய அவர் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற நிலைக்கு மாறி இருக்கிறார். அவரை குறைத்து மதிப்பிட வில்லை. சினிமாவை வைத்து அரசியல் நடத்தலாம் என்பது பகல் கனவு. எந்த காலத்திலும் அது நடக்காது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+