எம்பிபிஎஸ்-பிஇ படிப்பு-தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று நடைபெற்ற பள்ளிக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் கலந்துகொண்டு பேசுகையில்,
'நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் பொறியியல், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அது வழி வகுக்கும்.
மேலும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு படித்து தயார் செய்து கொள்ளும் மாணவர்களின் சுமையை இந்த ஒரே நுழைவுத் தேர்வு மூலம் குறைக்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள எஸ்ஐடி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013ல் இத்திட்டம் அமலுக்கு வரும்' என்றார்.












Click it and Unblock the Notifications