கோவில்கள் குறித்த நிகழ்ச்சிகளை டிவிகளில் ஒளிபரப்ப இந்து முன்னணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களின் சிறப்புகள் குறித்து நிகழ்ச்சிகளைத் தயாரித்து அவற்றை தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பனுக்கு இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் எழுதியுள்ள கடிதம்:

மலையாளத்தில் சூர்யா தொலைக்காட்சியில் கேரளத்தில் உள்ள கோவில்கள், சிறப்புகள், அங்கு நடக்கும் அற்புதங்கள், பரிகாரங்கள், பரிகாரத்தலங்கள் ஆகியவற்றை ஒளிபரபபுகிறார்கள்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன், குருவாயூரப்பன், ஏசியாநெட்டில் ஸ்ரீபாகவதம், தேவி பாகவதம் ஆகியவை மூலம் கோவில்களை பற்றிய பிரச்சாரம் மூலம் பக்தர் கூட்டமும், கோவில்களுக்கு வருமானமும் அதிகரிக்கிறது.

இதே போல நாமும் பழனி, மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், வைணவ திருத்தலங்கள், நவக்கிரக கோவில் பெருமை, அங்கு நடக்கும் அற்புதங்கள் போன்றவற்றை எல்லாம் தமிழ்நாட்டில் சிறந்த நடிகர், நடிகைகளைக் கொண்டு படமாக்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். பக்தர்களும் அதிகம் வருவார்கள்; வருமானமும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் கிராம மக்கள் தமிழக திருக்கோவில்களை தரிசனம் செய்வதற்காக குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பேருந்துகளை இயக்கினால் பக்தர்களுக்கு வசதியாகும். இதனால் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தாங்களும், முதலமைச்சரும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+