புனே குண்டுவெடிப்பு- கர்நாடகத்தில் 4 காஷ்மீர் இளைஞர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

வீராபுரா கட்டே என்ற இடத்தில் இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். கலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை புனே தனிப்படை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவர்களுடன் இருந்து வந்த மேலும் 3 பேரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள், புனே சம்பவத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான தொடர்பு உள்ளது என்ற விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை.
பாரம்பரிய சுற்றுலாத் தளமான ஹம்பி, வீராபுரா கட்டே பகுதியில், 40க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இங்கு வெளிநாட்டினர் பெருமளவில் வருவது வாடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications