துபாய்: மரண தண்டனையை எதிர்நோக்கும் 12 இந்தியர்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: மதுக் கடத்தல், போட்டிக் குழுவைச் சேர்ந்த இருவரை கடத்திச் சித்திரவதை செய்து, ஓரினச் சேர்க்கை கொடுமையைச் செய்து, உயிரோடு புதைத்துக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் நாட்டவருக்கு மரண தண்டனை கிடைக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த 13 பேரும் சேர்ந்து மதுக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போட்டி குழுவைச் சேர்ந்த இருவரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, உயிரோடு வைத்து இருவரையும் புதைத்துக் கொன்று விட்டனர்.

13 பேரும் கைது செய்யப்பட்டு துபாய் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது தங்கள் மீதான குற்றச்சாட்டை இவர்கள் 13 பேரும் மறுத்துள்ளனர்.

நேற்று இவர்கள் மீது கடத்தல், கொலை மற்றும் உடல்களை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டனர். 5 பேர் மீது செக்ஸ் சித்திரவதை குற்றச்சாட்டுப் பதிவானது. 10 பேர் குடிபோதையில் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டுப் பதிவானது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த 13 பேரும் சேர்ந்து அபு பக்கர் நுஜிலா என்பவரையும், இன்னொருவரையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் அவர்களை இரும்புக் குழாய்கள், குச்சிகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

13 பேரில் 5 பேர் அந்த இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். பின்னர் அந்த இருவரையும் ஒரு இடத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்து மேலே மண்ணைப் போட்டு மூடி விட்டனர்.

இந்த 13 பேரும் கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

12 இந்தியர்களில் 3 பேர் கொத்தனார்கள் ஆவர். ஒருவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். 8 பேர் வேலையில்லாமல் இருந்தவர்கள் ஆவர். கைதான பாகிஸ்தான் நபர் டிரைவர் ஆவார். அனைவரும் 21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆவர்.

கைதான இந்தியர்கள் 12 பேரும் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+