கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்.. தவெக அருள் விக்னேஷை அழைத்து கண்டித்த முதல்வர் அலுவலகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சில மூத்த அமைச்சர்கள், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை நேரில் அழைத்து மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜாவிற்கு, உள்ளூர் தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் தகாத முறையில் மெசேஜ் அனுப்பியதாகவும், அத்துமீறி செயல்பட்டதாகவும் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பின. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து விழுப்புரம் சரக காவல் உயரதிகாரிகள் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

Kallakurichi Collector Padmaja

போலீஸ் சொல்வது என்ன?

இந்த சர்ச்சை குறித்து ஊடகங்களிடம் பேசிய விழுப்புரம் சரக போலீஸ் அதிகாரி ஒருவர், "தவெக எம்.எல்.ஏ கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் குறித்து சில விரும்பத்தகாத மற்றும் முறையற்ற கருத்துக்களைக் கூறியது உண்மைதான். ஆனால், தற்போது பரப்பப்பட்டு வரும் ஆபாச குறுஞ்செய்திகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.. அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் காவல்துறையிடம் எந்தவித அதிகாரப்பூர்வப் புகாரும் அளிக்கப்படவில்லை. புகார் எதுவும் வராததால் காவல்துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்து எந்தவித நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதா?

சமூக வலைத்தளங்களில், "எம்.எல்.ஏ-வின் அச்சுறுத்தல் காரணமாக பெண் ஆட்சியருக்கு அரசு சார்பில் திடீரென கூடுதல் துப்பாக்கி ஏந்திய தனிப் பாதுகாப்பு அதிகாரி போடப்பட்டுள்ளார்" என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரி ஒருவர், "வழக்கமாகவே மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலக இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். எனவே, அவருக்காகப் புதிதாக எந்தக் கூடுதல் பாதுகாப்பும் போடப்படவில்லை" என்று கூறினார். அத்துடன், இந்தச் சம்பவம் இப்போது நடந்தது அல்ல என்றும், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடைபெற்ற ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வர் அலுவலகம் விடுத்த எச்சரிக்கை

காவல்துறையில் புகார் தரப்படாவிட்டாலும், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை உரிய உயர் அதிகாரிகள் மூலமாக தலைமைச் செயலகத்திற்கு முறைப்படி கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சில மூத்த அமைச்சர்கள், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை நேரில் அழைத்து மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், மாவட்ட ஆட்சியர் பத்மஜா வழக்கம்போல அரசு ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மற்றும் திட்டப் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

#'அவதூறு பரப்புகிறார்கள்' - எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்தார்.

"என் பெயருக்கும், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இத்தகைய கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகின்றன. ஆட்சியர் இல்லத்தில் எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் உள்ளன. அப்படி இருக்கும்போது அங்கே சென்று அத்துமீறினார் என்று சொல்வது முற்றிலும் பொய்யானது. நான் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க எந்தப் பரிசோதனைக்கும் தயார். இணையத்தில் விஷமத்தனமான பொய்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி புகார் அளித்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.

கண்டனங்கள்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் பெண் அதிகாரிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில், இது முந்தைய விவகாரம் என்பதும், ஆபாச மெசேஜ் குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், கட்சியின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தவிர்க்க, முதல்வர் விஜய் கூட்டவிருக்கும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தீவிரமாக அலசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+