பென்னாகரம்-இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: பென்னாகரம் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
பென்னாகரம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதில் பெருமளவிலான வாக்காளர்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மீண்டும் சரிபார்ப்புப் பணி நடந்தது.
இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக 19,510 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பென்னாகரம் தொகுதியின் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,01,696 பேர். பெண்கள் 96,830 பேர் இடம் பெற்றுள்ளனர். பெண்களை விட ஆண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications