உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 116 கோடி: வாடிகன்

Subscribe to Oneindia Tamil

Catholics
வாடிகன்: உலகில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.166 பில்லியனாக (116.6 கோடி) அதிகரித்திருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது.

வாடிகனில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆண்டுவிழா மலரின் புதிய பதிப்பு போப் 16வது பெனடிக்ட் முன்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், 2008ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு நிலவரப்படி உலக மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 17.4 சதவீதம் உள்ளனர். 2007ம் ஆண்டில் கத்தோலிக்கர்களின் சதவீதம் 17.33 என இருந்தது.

எனினும் உலகளவில் பாதிரிமார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு முதல் பாதிரிமார்களின் எண்ணிக்கையில் எட்டு சதவீத சரிவு காணப்படுகிறது. ஐரோப்பாவில் மட்டும் 17.6 சதவீதமும், அமெரிக்காவில் 12.9 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஆப்பிரி்க்கா (3.6 சதவீதம்), ஆசியா (4.4 சதவீதம்), ஒஷியானியா (6.5 சதவீதம்) உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+