ஸ்டிரைக்: இந்தியாவில் 13 லுஃப்தான்ஸா விமானங்கள் ரத்து!
Subscribe to Oneindia Tamil

ஜெர்மன் விமான சேவை நிறுவனமான லுஃப்தான்ஸா இந்தியாவில் இருந்து வாரத்துக்கு சுமார் 52 விமானங்களை இயக்குகிறது.
இதில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, கோல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் முனிச் நகரங்களுக்கு செல்லும் 13 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பைலட்டுகள் சங்கத்தினர் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, வரும் 25ம் தேதி வரை இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் லுஃப்தான்ஸா நிறுவனம், ஏர்இந்தியா உட்பட ஸ்விஸ் மற்றும் ஆஸ்திரேலிய நிறுவனங்களுடன் இணைந்து விமானப் போக்குவரத்து சேவை வழங்குவதால், மற்ற சேவைகள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications