கள்ளக்குறிச்சி திமுக எம்.பியின் அண்ணன் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாட்டம் திருக்கோவிலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி. ஆதிசங்கரின் அண்ணன் உயிரிழந்தார்.
ஆதிசங்கரின் அண்ணன் டாக்டர் ஆதி சந்திரசேகர் (55). திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர் பேட்டை கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் தினந்தோறும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம்.
இன்று காலை சந்தைபேட்டை என்ற இடத்தில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஒன்று அவரது பின்புறமாக மோதியது. ரத்த வெள்ளத்தில் விழுந்த ஆதிசந்திரசேகர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
வேன் மோதி எம்.பியின் அண்ணன் இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications