பென்னாகரம் இடைத் தேர்தல்- பணிக் குழுவை அறிவித்தார் விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பணி பொறுப்பாளராக தர்மபுரி மாவட்ட செயலாளர் டாகடர்.வி.இளங்கோவன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எஸ்சந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ந.ராதாகிருஷ்ணன், நாமக்கல் மாவாட்ட கழக செயலாளர் வி.சம்பத்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications