அன்டார்க்டிக் பனிக் கட்டி உடைந்தது- பெங்குயின்களுக்கு ஆபத்து

Subscribe to Oneindia Tamil

Iceberg
லண்டன்: அன்டார்க்டிக் அருகே மிகப் பெரிய பனிக் கட்டி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பெங்குயின்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 78 கிலோமீட்டர் நீளமும், 39 கிலோமீட்டர் அகலமும் கொண்டது இந்த ராட்சித பனிக் கட்டி. அன்டார்க்டிக் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் இது உடைந்துள்ளது.

இதனால் அன்டார்க்டிக் கடல் பகுதியின் உயிரினங்களுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

மெர்ட்ஸ் கிளேசியர் டங் பகுதியிலிருந்து இது உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பனிக் கட்டியின் மீது பி9பி என்ற இன்னொரு ராட்சத பனிக்கட்டி மோதியதால் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் எம்பரர் பெங்குயின்கள் பெரும் கூட்டமாக உள்ளன. அவற்றுக்கு இந்த பனிக்கட்டி உடைப்பால் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள பல்வேறு பறவையினங்களும் வேறு பகுதிக்கு இடம் மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் பெங்குயின்கள் மட்டுமல்லாமல் சீல்களும் கூட அதிகம் உள்ளன. அவை இப்பகுதிக்கு பெருமளவில் வருவது வழக்கம். இவையும் கூட தற்போது ஆபத்தை சந்திக்கவுள்ளன என்று ஆஸ்திரேலிய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+