ராமநாதபுரம் அருகே நிர்வாண தண்டனை வழங்கிய கிராம பஞ்சாயத்து - மாவட்ட கலெக்டரிம் புகார் !
ராமநாதபுரம்: தனக்கும், தனது மனைவிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் நிர்வாண தண்டனை வழங்கப்பட்டதாகவும், தங்களது குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் கணவன்-மனைவி புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குமரக்குடி காலனியில், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக வசித்து வருகின்றனர்.
இதில் சந்திரன் என்பவருக்கும், கிராம தலைவர் அழகு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, பரமக்குடி போலீசார் இரு தரப்பையும் விசாரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், அதே மாதத்தில் ஊர் கூட்டத்தில் சந்திரன் கடனாக பெற்ற ஊர் பணத்தை வட்டியோடு செலுத்த கிராம மக்கள் சார்பில் கேட்டுக் கொளளப்பட்டது. இதனையடுத்து, சந்திரனும் அந்த பணத்தை செலுத்தி உள்ளார்.
அதன் பிறகும், அவர் ஊர் பொது பாதையில் நடக்கவும், பொதுக் குழாயில் குடிநீர் பிடிக்கவும், கிராமத்தினர் அவரது குடும்பத்தினருடன் பேசவும் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சந்திரன் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊர் மக்களோடு இணைந்து வாழ வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் அபராதம் கட்டுவதோடு, கிராமக் கூட்டம் முடியும் வரை கணவனும், மனைவியும் இருவரும் நிர்வாணமாக சபையை வணங்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கணவன் மனைவி இருவரும் இதை ஏற்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே இந்த சம்பவம் பற்றி புகார் கூறப்பட்ட நிலையில், மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் சந்திரனும் அவரின் மனைவியும் புகார் அளித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications