தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்- சாமி, சந்திரலேகாவையும் விசாரிக்கக் கோரி மனு
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமிக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த சந்திரலேகாவுக்கும் தொடர்பு உண்டு என்றும், எனவே அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, தலைமைச் செயலாளராக இருந்த எல்.கே.திரிபாதியும், உபாத்யாயாவும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
லஞ்ச ஊழல் வழக்குகள் தொடர்பாக உபாத்யாயாவிடம் அதில் பேசியிருந்தார் திரிபாதி. இதை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது.
அடுத்து, அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும், உபாத்யாயாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தனது உறவினர் தொடர்பான ஊழல் வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உபாத்யாயாவை கேட்டுக் கொண்ட தொலைபேசி உரையாடலும் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. இதை வெளியிட்டவர் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் பூங்கோதை ராஜினாமா செய்தார். அவரது செயல் வெட்கக்கேடானது என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையிலேயே வர்ணித்திருந்தார். பின்னர் பூங்கோதை மீண்டும் அமைச்சராக்கப்பட்டு தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த இரு விவகாரம் குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக ஊழியர் சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு 5வது விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. ஏற்கனவே குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இப்போது சங்கர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
இந்த ரகசிய பேச்சு வெளியானதற்கு நான் மட்டும்தான் காரணம் என்பதுபோல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சு வெளியானதற்கு வேறு நபர்களுக்கு தொடர்பு இருந்திருக்கவில்லை என்ற கோணத்தில் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதே காலகட்டத்தில் உபாத்யாய் மற்றும் அமைச்சர் டாக்டர் பூங்கோதை இடையே நடந்த போன் உரையாடலை, ஜனதா கட்சித் தலைவர் 12.5.08 அன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்.
உபாத்யாயின் போன் உரையாடல் பதிவு சுப்பிரமணிய சாமிக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றி என் மீதான வழக்கின் விசாரணை அதிகாரி குறைந்தபட்சம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அவரிடமோ அல்லது அந்த கட்சியைச் சேர்ந்த சந்திரலேகாவிடமோ விசாரணை அதிகாரி விசாரணை நடத்தி இருக்க வேண்டும். அவர்களை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்காதது, விசாரணையில் ஏற்பட்ட குறைபாடாகும்.
இந்த வழக்கில் சாட்சியாக காட்டப்படும் எஸ்.பிரபாகரனின் வாக்குமூலத்தின்படி, உபாத்யாவின் இதுபோன்ற பேச்சுகள் அடங்கிய டி.வி.டிக்கள் அனைத்தும் அவரது பி.ஏ. பட்டனின் தனிப்பட்ட அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. அதாவது, உபாத்யாவின் அனைத்து ரகசிய பேச்சுகளுக்கும் பட்டன்தான் பாதுகாவலர்.
எனவே இந்த வழக்கில் பட்டனின் கம்ப்யூட்டரையும் போலீசார் ஆய்வு செய்து, அவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்திருக்கக் கூடுமோ? என்று விசாரணை நடத்தியிருக்கலாம். அதையும் போலீசார் செய்யவில்லை. எனவே இது மற்றொரு குறைபாடாகும்.
உபாத்யாவின் லேப்-டாப், அங்குள்ள சர்வருடன் இணைக்கப்பட்டு இருந்தது. எனவே சர்வரை பயன்படுத்தும் எவரும், அவரது கம்ப்யூட்டருக்குள் நுழையலாம். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி, சர்வரை கைப்பற்றவில்லை.
எனவே ஒட்டு மொத்தத்திலும் குறைபாடுகளை வைத்து தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications