செம்மொழி நிறுவன தொல்காப்பியர் விருது - 28ம் தேதி கருணாநிதி வழங்குகிறார்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் அறிஞர் ஒருவருக்கு 5 லட்ச ரூபாய் பொற்கிழியுடன் தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டு அறிஞர் ஒருவருக்கும், அயல்நாடு வாழ் இந்தியர் ஒருவருக்கும் தலா 5 லட்ச ரூபாய் பொள்கிழி கொண்ட குறள்பீட விருதும் வழங்கப்பட உள்ளது.
மேலும் இளம் தமிழறிஞர்கள் இடையே தமிழ் ஆராய்ச்சித் திறனை வளர்த்திடும் நோக்கில் தலா ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியுடன் 5 இளம் அறிஞர் விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி 2005 - 06ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெறுவோர் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இந்த விருதுகளை வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications