பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ்

மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று விவாதிக்கப்பட்டது. அதன் விவரம்:
சுதர்சனம் (காங்கிரஸ்): கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ் கொல்லப்பட்டதை எண்ணி வருந்தாதவர்களே கிடையாது. ஆனாலும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு தேடி தரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
பிரபாகரனின் தாயார் 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். 2003ல் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் காரணமாக பார்வதி அம்மாளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வருக்கு தெரியாமல், தெரியப்படுத்தாமல், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்வதி அம்மாள் வருகிறார். ஆனால் வைகோ, பழ. நெடுமாறனுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவர்கள் தொண்டர்களுடன் வரவேற்க செல்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் அவரது வருகை எப்படி தெரிகிறது?
மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் யாருக்கும் தெரிவிக்காமல் வந்ததால், விமான நிலைய அதிகாரிகள் இங்கு அனுமதிக்கவில்லை.
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரியாமல் விசா கொடுத்து விட்டது. பிறகு விபரம் தெரிந்ததும் அவர்களும் அனுமதி கொடுக்கவில்லை.
பார்வதி அம்மாளை இங்கு வரவழைத்து அரசியல் நடத்த சில கட்சிகள் திட்டமிட்டதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். 2011ல் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், உலகத் தமிழ் மாநாடு நடக்க உள்ள நிலையில் இவர்கள் தமிழர் எழுச்சி மாநாடு என்று பார்வதி அம்மையாரை வைத்து நடத்த திட்டமிடுவதாகத் தெரிந்தது.
சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பார்வதி அம்மாள் மூலம் வைகோ மலிவான அரசியல் நடத்த நினைத்தார். எனவே பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்.
ஜி.கே.மணி (பா.ம.க.): பிரபாகரனின் தாயார் உயிருக்குப் போராடுகிறார். தமிழ்நாட்டில் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்பதற்காக மலேசியா நாட்டின் குடி உரிமை அதிகாரிகள் அனுமதி பெற்று சென்னை வந்தார். அவரை திருப்பி அனுப்பியது மனித நேய மற்ற, ஈவு இரக்கமற்ற செயல்.
அவர் 79 வயதை கடந்தவர். சிகிச்சைக்காக ராஜபக்சேவே அனுமதி கொடுத்துள்ளார். ஆனால் சென்னையில் அவரை திருப்பி அனுப்பியது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு களங்கமாகும்.
தமிழ்நாட்டை நாடி மருத்துவ உதவி பெற வந்தவர், முதல்வருக்கு தகவல் கொடுத்து இருக்கலாம். இது உயிர் காக்கும் பிரச்சனை. அவரை விமானத்தில் இருந்து இறங்க விடாமல் தடுத்து நிறுத்தியது யார்?. இந்த விஷயத்தில் சில கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
அந்தப் போராட்டங்களுக்கு இடம் கொடுக்காமல் சென்னையில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் வரலாம் என்ற அறிவிப்பை வெளியிட செய்ய வேண்டும். அது உலகத் தமிழர்களுக்கு மிகவும் ஆறுதலான செய்தியாக இருக்கும்.
சதன் திருமலைக்குமார் (மதிமுக): பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய செயலை மதிமுக கண்டிக்கிறது. அவர் யாராலும் அழைத்து வரப்படவில்லை. நோயாளியாகத்தான் அவர் வந்தார். அவரை வைத்து அரசியல் நடத்தும் நிலை எங்களுக்கு இல்லை. நட்பு முறையில் விமான நிலையத்துக்கு வரவேற்க சென்ற வைகோ, நெடுமாறனுக்கு தடை போட்டது ஏன்?.
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): பார்வதி அம்மாவால் இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது இல்லை. முதல்வரின் கவனத்துக்கு வந்திருந்தால் அவரை திருப்பி அனுப்பி இருக்க முடியாது. முதல்வர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடு்த்து தமிழ்நாட்டில் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட்): பார்வதி அம்மாளுக்கு 6 மாதம் இங்கு தங்கி இருக்க வெள்ளிக்கிழமை காலைதான் அனுமதி கொடுத்துள்ளனர். அன்றிரவே அவரை திருப்பி அனுப்பியது சரியான அணுகு முறை அல்ல. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): பார்வதி அம்மாள் உரிய முறையில் இங்கு வரவில்லை என்று சுதர்சனம் கூறினார். இது முரண்பட்ட நிலையாக உள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும், உரிய மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்று எல்லாரும் குரல் கொடுக்கும் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு சிகிச்சைக்கு வந்தவரை திருப்பி அனுப்பியது வேதனை தருகிறது. தமிழ்நாட்டில் இப்படி நடக்கலாமா?.
சிவபுண்ணியம் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ் விளக்கம் அளித்தார். பதிலுக்கு சிவபுண்ணியம் சில வார்த்தைகளை கூறினார்.
இதனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவபுண்ணியம் பேச்சில் ஒரு பகுதியை நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications