சங்கர்ராமன் கொலை வழக்கு 'அப்ரூவர்' ரவி சுப்பிரமணியம் தாய் வழக்கு

தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியம் கடந்த 13.12.2004ல் கைதானார். தற்போது காஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரவி சுப்பிரமணியம் அடிக்கடி மயங்கி விழுகிறார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிறப்பு மருத்துவரிடம் சரியான சிகிச்சை கொடுக்காததால் ரவி சுப்பிரமணியத்தின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை தனியார் மருத்துவமனையிலோ அல்லது அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவிலோ அனுமதித்து சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அவரது தாயாரான எனக்கு ரவி சுப்பிரமணியத்தை பார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஜின்னா ஆஜராகி, மனுதாரர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் முறையிடாமல் நேரிடையாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்றார்.
இதனையடுத்து மனுதாரர் முதலில் சம்பந்தப்பட்ட சிறை துறையிடம் முறையீடு செய்யுமாறு கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர் தள்ளி வைத்தார்.
அந்தக் கொலை வழக்கில் அப்ரூவரான காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியன், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு எதிராக ஏராளமான தகவல்களை போலீசாரிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலை வழக்கு விசாரணை இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இந்தக் கொலையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, ரவி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications