மும்பை கொல்கத்தாவிடம் தோற்றது எப்படி? – பால் தாக்கரே சந்தேகம்
மும்பை: தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ் அணி திடீரென கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வியுற்றது எப்படி. அன்றைய போட்டியில் முன்னணி வீரர்களான டெண்டுல்கர், போலார்ட், லசித் மலிங்கா ஆகியோர் விளையாடாதது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து பால் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், லலித்மோடி, சசி தரூர் இடையிலான மோதலால் ஜென்டில்மேன்களின் விளையாட்டு எனக் கூறப்பட்டு வந்த கிரிக்கெட்டுக்கு பெரும் கெட்ட பெயர் வந்து விட்டது.
கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் ஐபிஎல்லை முழுமையாக தடை செய்ய வேண்டும். உண்மையிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கிரிக்கெட் மீது அக்கறை இருக்குமானால் உடனடியாக பணத்தால் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கிய ஐபிஎல்லை தடை செய்ய வேண்டும்.
மோடி யார் அவர் என்ன பெரிய ஆளா. தற்போதைய சர்ச்சை எல்லாம் பணத்தைப் பற்றியதுதான். ஐபிஎல் 3வது தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் தீர விசாரிக்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மோசமான முறையில் தோல்வியுற்றது. மும்பை அணியின் முக்கிய வீரர்களான டெண்டுல்கர், லசித் மலிங்கா, போலார்ட் ஆகியோர் அன்றைய தினம் ஆடவில்லை. அது ஏன். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். கொல்கத்தா அணி வென்றது எப்படி என்பது விசாரிக்கப்பட்டே ஆக வேண்டும்.
ஐபிஎல் அணிகளில் பெருமளவில் பணத்தைக் குவித்துள்ள தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார் தாக்கரே.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications