கோவை செம்மொழி மாநாட்டுக்காக கோவில்களில் பூஜை-அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் நடத்தப்பட இருக்கும் செம்மொழி மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, கோவில்களில் லட்சார்ச்சணை பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிமுக எம்எல்ஏ மலரவன் கூறினார்.

சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்:

மலரவன் (அதிமுக): கோவை மாவட்டத்தில் பெரும் பகுதி பில்லூர் அணையை ஆதாரமாக கொண்டு பயன்பெறுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட இதன் 2வது திட்டம், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கோவை பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்காக பஸ் நிலையம் அமைத்தோம். ஆனால், அதற்கு இன்னமும் கூரை போடப்படவில்லை.

இந்த 4 ஆண்டுகளில் கோவைக்கு திட்டங்களே இல்லை. திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக்கினீர்கள். ஆனால், அந்த நகராட்சித் தலைவர்களையே மாநகராட்சி மேயர்களாக மாற்றினீர்கள். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.

சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்த சென்னை நதிநீர் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள சிறிய கால்வாயையே சுத்தப்படுத்த முடியவில்லை. கூவம் நதியையா நீங்கள் சீர்படுத்த போகிறீர்கள்?.

1973ம் ஆண்டில் இன்றைய முதல்வர், கூவத்தை சுத்தப்படுத்த விழா நடத்தியபோது படகு விடும் நிகழ்ச்சியின்போது ஒரு எம்.எல்.ஏ கூவத்தில் விழுந்தார். அதனால், அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. எனவே, மக்களின் வரிப் பணத்தை வீணாக்க வேண்டாம்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2,11,356 ஏக்கர் நிலம் தந்திருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் கோவை மேற்கு தொகுதியில் ஒருவருக்கு கூட வழங்கவில்லை.

அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி: கோவை மேற்கு தொகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.20 கோடிக்கு விற்கப்படுகிறது. அங்கு எப்படி இலவச நிலம் அளிப்பது?

அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன்: கோவையில் திமுக ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்கிறார். ஒண்டிப்புதூர், உக்கடம் மேம்பாலம் ஆகியவை இப்போது கட்டப்பட்டவைதான். உப்பிலிபாளையம் பாலம் கட்டியது, ஹோப் கல்லூரி ரயில்வே பாலத்தில் 3 வழித்தடம் அமைக்கப்பட்டிருப்பதும் இப்போதுதான். கருணாநிதி எப்போது முதல்வராக இருந்தாலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். இவர் (மலரவன்) மேயராக இருந்தபோது பத்திரிகைகளில் செய்தி வருமே தவிர திட்டங்கள் நடக்காது.

மலரவன்: நெடுஞ்சாலைத்துறை கட்டிய ஒரு பாலத்தில், கீழே யாரும் போக முடியாதபடி நீர் தேங்கியிருக்கிறது.

அமைச்சர் சாமிநாதன்: நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது.

மலரவன்: கோவையில் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் வேளையில் அது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, கோவில்களில் லட்சார்ச்சணை நடக்கிறது. 1973ம் ஆண்டில் கோவை காந்தி இர்வின் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சிதம்பரம் பூங்காவில் மாநாடு போட்டீர்கள். அது முடிந்ததும் ஆட்சி கலைக்கப்பட்டது. அதுபோல ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் லட்சார்ச்சணை செய்கிறீர்கள்.

அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி: அரசு எப்போதும் கோவில்களில் அர்ச்சணை செய்ததில்லை. சிலர் நம்பிக்கை அடிப்படையில் பூஜை செய்கிறார்கள். அதை கொச்சைப்படுத்தாதீர்கள்.

மலரவன்: நடப்பதைத்தான் சொல்கிறேன்.

அமைச்சர் எ.வ.வேலு: அ.தி.மு.க. ஆட்சியில்தான், அரசு கட்டிடத்துக்கு கூட பூமி பூஜை நடத்தப்பட்டது.

மலரவன்: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆடு வெட்டி, சுவர்களில் ரத்தம் தெளித்ததை யாரும் மறக்கவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+