பெங்களூர் கோர்ட்டில் சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
பெங்களூர் : நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு பெங்களூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நித்தியானந்தா ஜாமீன் கோரி ராம்நகர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது மே3ம் தேதி விசாரணை நடந்தது. பின்னர் மே 7ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று நீதிபதி குனகுந்த் முன்னிலையில் மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், நித்யானந்தா மீது கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக இன்னும் முழுமையான விசாரணை முடியவில்லை. அவருடன் ஆபாச காட்சிகளில் இருக்கும் நடிகை ரஞ்சிதா இதுவரை சி.ஐ.டி போலீசார் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் போலீசாருக்கு தெரியவரவில்லை. இந்த நிலையில் அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications