இழுபறி முடிந்தது –ஜார்க்கண்டில் பாஜக தலைமையில் புதிய ஆட்சி

இந்த முடிவை முதல்வர் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் இன்று அறிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவுசெய்துள்ளது. காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர்ஆட்சியை பிரகடனம் செய்ய முயலுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றார்.
முன்னதாக டெல்லியில் பாஜக தலைவர் நிதின் கத்காரியை ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்.
புதிய திட்டத்தின்படி பாஜக முதல்வர் பதவியை எடுத்துக்கொள்ளும். ஹேமந்த் சோரனுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும்.
விரைவில் முதல்வர் பதவிக்கான தலைவரை பாஜக அறிவிக்கும். தற்போதைய நிலையில் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டாவின் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.
மே10ம் தேதி பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என மூத்த பாஜக தலைவர் அனந்த்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications