அதிக கல்விக் கட்டணம் - ஒப்புக் கொள்வதாக பெற்றோர்களிடம் கடிதம் கேட்கும் பள்ளிகள்
சென்னை: கூடுதல் கல்விக் கட்டணத்தை செலுத்த சம்மதிக்கிறோம் என்று ஒப்புதல் கடிதம் தர வேண்டும் என பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன என்று புகார்கள் எழுந்துள்ளன.
எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
தொடக்கப் பள்ளி வரை படிக்கும் குழந்தைகளிடம் அதிகபட்சமாக ரூ.5000 வரையிலும், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7000 மும் உயர் நிலைப்பள்ளி (9-10 வகுப்பு) மாணவர்களுக்கு ரூ.9000மும், மேல்நிலைப் பள்ளி (பிளஸ்-1, பிளஸ்-2) மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000மும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் குறைவாக உள்ளதாகவும் அதைவிட கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் திருப்தி அளிக்காத பட்சத்தில் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1200 பள்ளி நிர்வாகிகள் மேல் முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நிர்ணயித்து அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே கூடுதலாக கட்டணம் வசூலித்து விட்டனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளனர். பெறப்பட்ட கட்டணத்துக்கு சிலர் ரசீதும் வழங்கியுள்ளனர். சில பள்ளிகள் வாய் மொழியாக கட்டணத்தை கூறி பெற்றுக் கொண்டனர்.
கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அதன் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் கூடுதலாக பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுப்பார்களா என்று எதிர்பார்க்கின்றனர். பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தை திருப்பி கேட்டால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. கட்டணத்தை திருப்பி தர முடியாது என திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
சில பள்ளி நிர்வாகம் நாங்கள் மேல் முறையீடு செய்துள்ளோம். இதனால் கட்டணம் மேலும் உயரும், காத்திருங்கள் என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் சில தனியார் பள்ளிகள் இதற்கெல்லாம் மேலாக பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கி வருகிறார்கள்.
நாங்கள் விரும்பியே கூடுதல் கட்டணத்தை செலுத்தியுள்ளோம். குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம். அதனால் கட்டணத்தை திரும்ப கேட்கமாட்டோம், என பெற்றோர்களிடம் கட்டாய கடிதம் வாங்கியுள்ளனர். சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் இந்த புதிய உத்தியை கடைபிடிக்க தொடங்கியுள்ளனராம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications