வாழ்வதற்குத் தரமான நகரம் டெல்லி-மோசமான பகுதி காந்தமால்: சர்வே

Subscribe to Oneindia Tamil

Delhi
மும்பை: இந்தியாவில் வாழ்க்கை நடத்துவதற்கு தரமான, தகுதியான நகரங்களாக டெல்லி, மும்பை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மோசமான பகுதிளாக ஒரிசா மாநிலத்தின் காந்தமால், ராயகதா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடா ஸ்டிரேட்டஜிக் மேனேஜ்மென்ட் குரூப் நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக முதலிடத்தை மத்திய டெல்லி பிடித்துள்ளது. 2வது இடத்தை புதுடெல்லியும், 3வது இடத்தை வடக்கு டெல்லியும் பிடித்துள்ளன.

4வது இடம் மும்பை மாநகருக்கும், 5வது இடம் மும்பை புறநகர்களுக்கும் கிடைத்துள்ளது.

மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட பகுதிகளாக ஒரிசாவின் ராயகதா, காந்தமால் மாவட்டங்கள் பெற்றுள்ளன. அடுத்த இடம் பீகாரின் பங்கா மாவட்டத்திற்குக் கிடைத்துள்ளது.

கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, உடல்நலம், போக்குவரத்து, வீட்டுவசதிகள், சமையலறை வசதிகள் ஆகியவற்றில் டெல்லியும், மும்பையும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

கல்வியில் மிகச் சிறந்த பகுதியாக நாகாலாந்தின் சன்ஹேபோட்டா விளங்குகிறது. கடைநிலையில் இருப்பது ஒரிசாவின் ராயகதா.

நாடு முழுவதும் 600 மாவட்டங்களை ஆய்வு செய்து இந்த முடிவை வெளியிட்டுள்ளதாம் டாடா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+